அரசின் காணாமல்போனோர் அலுவலகம் ஓர் இன வெறி அமைப்பு என்று கண்டனம்

Missing Persons Sri Lanka
By Rakesh Oct 29, 2022 06:54 AM GMT
Report

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் என்பது ஓர் இனவெறி அமைப்பு என்று காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமாரால்  வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது .

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, வவுனியாவில் 2075 நாட்களை கடந்தும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தினரால், அரசின் காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் அதன் பொறிமுறையைக் எதிர்த்து - கண்டனம் தெரிவித்து காணாமல்போனோர் அலுவலகத்தால் தாய்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதங்களும் போராட்டப் பந்தலில்  தீ வைத்து எரிக்கப்பட்டன.

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் என்பது ஓர் இனவெறி அமைப்பு. காணாமல்போனோர் அலுவலகம், தொல்பொருள், வனவள திணைக்களம் அனைத்தும் ஒன்றுதான்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2078ஆவது நாள்.

இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்றும், சரணடைந்த தமிழர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்படவில்லை என்றும் அரசின் காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முதலில் மன்னாரில் அரசின் காணாமல்போனோர் அலுவலகம் உருவானபோது நாங்கள் நிராகரித்து ஆர்ப்பாடட்டம் செய்தோம்.

நிமல்கா பெர்னாண்டோ இதனை உருவாக்குவதற்குத் தலைமை தாங்கினார். சிங்கள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காகவே காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.

சுமந்திரன் அரசின் காணாமல்போனோர் அலுவலகத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அரசின் காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்குவதற்காக ஜெனிவாவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை அவர் கைவிட்டார் என்பதை நாம் தமிழர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

இந்தச் சுமந்திரனைத் தமிழ் அரசியலில் இருந்து தூக்கி வீச வேண்டும். அவரை மீண்டும் கொழும்புக்கு அனுப்ப வேண்டும். பல தமிழர்களைக் கடத்திச் சென்றும், குண்டுகள் போட்டும், தமிழரைக் கொன்றதும் இலங்கை இராணுவம்தான் என்று 2011 ஐநா குழு அறிக்கை கூறுகின்றது.

2011இல், ஐ.நா. குழு நம்பகமான குற்றச்சாட்டுகளைக் கண்டறிந்தது, அது நிரூபிக்கப்பட்டால், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் ஓர் இன வெறி அமைப்பு என்று கண்டனம் | Missing Person S Office Is Condemned

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் என்பது தொல்பொருள், வனவளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி போன்ற பிற அரசுத் துறைகளுடன் இணைந்து தமிழர்களை ஒடுக்குவதற்கான மற்றொரு சிங்கள ஸ்ரீலங்காவின் கருவியாகும்.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் கீழ், ஸ்ரீலங்கா இன்னும் அதன் அடக்குமுறையைத் தொடர்கின்றது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற பணக்கார நாடுகள் ஸ்ரீலங்காவுக்குப் பணம் கொடுத்து அவர்களின் கஷ்டத்தைத் தீர்த்தால் அது அவர்களின் இன அழிப்புக்கு ஒட்சிசன் கொடுப்பதாககும். அரசின் காணாமல்போனோர் அலுவலகத்தின் அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி பேசுவது பயனற்றது மற்றும் நேரத்தை வீணடிப்பது என்று அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தெரிவிக்க விரும்புகின்றோம். தமிழர்களுக்கு உதவக்கூடிய ஒரே நாடு அமெரிக்கா என்று நாங்கள் இன்னும் உறுதியாக நம்புகின்றோம்" - என்றுள்ளது. 

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US