இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
கலஹுகொட மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கலிங்க ரமேஷ் சதுரங்க பெரேரா என்ற இளைஞன் காணாமல்போயுள்ள நிலையில், இவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த இளைஞனின் தாயார் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த இளைஞன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் முறைப்பாடு
குறித்த இளைஞன் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு,
பெயர் - கலிங்க ரமேஷ் சதுரங்க பெரேரா, உயரம் - 05 அடி 05 அங்குலம், கடைசியாக நீலம் மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட காற்சட்டை மற்றும் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தார்.
இந்நிலையில் இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591612 அல்லது 031 – 2295223 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
