வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கலே மீளவும் வேண்டும், இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வவுனியாவில் 2156ஆவது நாளாக சுழற்சி முறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாரால் இந்த பேராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களது போரட்ட கொட்டகை முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (15.01.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“பிள்ளைகள் மீள வந்த பின்னரே எமக்கு பொங்கல்”
போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரும், சிறுவர்களும் பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கல் வேண்டும் என எழுதப்பட்ட பொங்கல் பானைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மீள வந்த பின்னரே எமக்கு பொங்கல்
எனத் தெரிவித்து கண்ணீர் மல்க அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.






மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
