அமெரிக்காவில் மாயமான இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் சடலமாக மீட்பு
பத்து நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி இளைஞரான 30 வயதான அங்கித் பகாய் என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேரிலாந்தில் ஹைலேண்ட்ஸில் உள்ள Churchill ஏரியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கித் பகாய் ஏப்ரல் 9ஆம் திகதி காணாமல் போனார். அவரைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 5000 அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.
பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அங்கித்
அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, பகாய் மேரிலாந்தின் ஜெர்மன்டவுனில் உள்ள ஒரு மருத்துவ வசதியிலிருந்து வெளியேறியுள்ளார், அவர் கடைசியாக 12000 பாந்தர்ஸ் ரிட்ஜ் டிரைவில் காணப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவந்த அங்கித், பல உயிர்காக்கும் மருந்துகளை உட்கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை சர்ச்சில் ஏரியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டதையடுத்து, உடல் தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பரிசோதனையில், அது ஜேர்மன்டவுனின் அங்கித் பகாயின் உடல் என அடையாளம் காணப்பட்டது என மாண்ட்கோமெரி பொலிஸார் அறிவித்தனர்.
மேலும், அவரது மரணத்தில் சந்தேகிக்கும்படியாக எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
பகாயைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம், வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் அவரது இறுதிச் சடங்குகளை அறிவித்தது.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
