பிரித்தானியாவில் காணாமல்போன இந்திய சிறுமியை தேடும் பணிகள் தீவிரம்
பிரித்தானியாவில் கிழக்கு லண்டன் அருகே 15 வயதுடைய இந்திய சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி நேற்று (14.06.2024) முதல் காணமல் போயுள்ளதாக எசெக்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பொலிஸ் அறிக்கை
எசெக்ஸ் Benfleet பகுதியில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளில் ஒருவரான அனிதா கோசி (Anita Kosi) 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாவார்.
இந்த சிறுமியின் குடும்பம் இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர்.
மேலும், காணமல் போன சிறுமி 5 அடி 4 அங்குல உயரம், நீண்ட கறுப்பு முடி மற்றும் கண்ணாடியுடன் காணப்படுவார் என எசெக்ஸ் பொலிஸார் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் காணாமல் போனபோது வெள்ளை மேலாடை, கருப்பு கால்சட்டை மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை நிற காலணிகளை அணிந்திருந்ததாகவும் அவர் ஒரு கைப்பையையும், செம்மஞ்சள் நிற கைப்பிடிகள் கொண்ட சாம்பல் நிற தோல் துணி பையையும் எடுத்துச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனிதா நேற்றுமதியம் தொடருந்தில் லண்டனுக்குப் பயணம் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |