மத்திய வங்கியிலிருந்து காணாமல்போயுள்ள தங்கம்: உடனடி விசாரணை கோரும் பேராயர்
பில்லியன் தொகையான பாரிய கையிருப்பு பூச்சியமானமை மற்றும் மத்திய வங்கியிலிருந்த தங்கம் காணாமல்போனமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
றாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறுகிய காலப்பகுதிக்குள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு சகோதரத்துவமும், ஒத்துழைப்பும் அவசியமாகும்.

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது
நாடு என்பது அரசியல் தலைவர்கள் அல்லர், மக்களாவர். மக்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு உதவிசெய்வது பொய் வேலையாகும்.
பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஒரு தரப்பு அல்ல, பல தரப்பினர் இதில் தொடர்புபட்டுள்ளனர்.

7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது?மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது? இவை பொறுப்பற்ற முறையில் வீணாக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.இவை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்திற்கு ஒரு தீர்வாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri