3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : நபர் ஒருவருடன் கைது
திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் இருந்து சுமார் 3 மாதங்களாக காணாமல் போயிருந்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவுலபிட்டிய கொங்கடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரது தாயார் 3 மாதங்களுக்கு முன்னர் படல்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன சிறுமி
காணாமல் போன சிறுமியை பொலிஸார் பலமுறை தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர், சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பல குழுக்கள் களமிறக்கப்பட்டன.

குறித்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பொலிஸ் குழுவிற்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதற்கமைய, அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழு, சிறுமியையும், சிறுமியுடன் இருந்த ஒருவரையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட சிறுமி படல்கம பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri