காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!
யாழ்ப்பாணம் - காங்கேசன் துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்காக சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல் போன நிலையில், அவர்கள் தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலாளர்கள் இருவரும் கடற்றொழிலுக்காகச் சென்றபோது அவர்களின் படகு பழுதடைந்ததால் இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது.
கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட இருவர்
இதனை அவதானித்த இந்திய கடற்றொழிலாளர்கள், குறித்த படகை தமது விசைப்படகால் இழுத்துச் சென்று, கடற்றொழிலாளர்களுக்கு உணவும் நீரும் வழங்கி, பின்னர் இலங்கை கடல் எல்லையில் விட்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற நிலையில், இன்று (04.03.2026) ஏழாவது நாளில் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam