காணாமல் போன யாழ். கடற்றொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சரிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை
யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு கடற்றொழிலாளர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில், அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நேற்று(04.03.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திசை மாறிய சென்ற கடற்றொழிலாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த இரு கடற்றொழிலாளர்களும் காணாமல் போய் ஆறு நாட்கள் கடக்கின்ற நிலையில் அவர்களின் குடும்பங்கள் மிகவும் வேதனையுடன் காணப்படுகிறார்கள்.

தமது கடற்றொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் கடற்படையினருக்கும் பொலிசாருக்கும் அமைச்சராகிய உங்களுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கி உள்ள நிலையில், அவர்களின் நிலைமை தொடர்பில் இதுவரை அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்காமை மன வருத்தத்தை தருகிறது.
கடலில் அவர்கள் திசைமாறி சென்று கொண்டிருப்பதாகவும் அவர்களை தாங்கள் கண்டதாகவும் இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன் துறை கடற்றொழிலாளர்களிடம் கூறிய ஒளிப்பதிவும் இருக்கின்ற நிலையில், நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்க முடியாத விடயம்.
ஆகவே கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பிலும் அவர்களின் குடும்பத்தின் நிலைமை தொடர்பிலும் கரிசனை கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam