காணாமல் போன கடற்றொழிலாளி சடலமாக மீட்பு
மட்டக்களப்பு (Batticaloa) காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன கடற்றொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு கடலுக்கு சென்ற மேற்படி கடற்றொழிலாளி இன்று அதிகாலை 3 மணியளவில் கடற்றொழில் ஈடுபட்டு விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.
தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்
இவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல்போனவரின் சடலம் கடற்றொழிலாளர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தரான 59 வயதுடைய ஷாகுல் ஹமீத் முஹம்மத் பஷீர் என்பவரே இவ்வாறு காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan
