காணாமல் போன மகள்:கண்டுபிடித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தை
சுமார் ஒரு வாரமாக காணாமல் போயுள்ள தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து தந்தை ஒருவர் அதிசக்தி வாய்ந்த மின் கோபுரத்தில் ஏறி நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கல்கிரியாகம பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து, கலேவல குடாவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள மின் கோபுரத்தில் நேற்று மாலை ஏறிய இந்த நபர் அதில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
150 அடி உயரமான மின் கோபுரத்தில் ஏறிய போராடும் தந்தை
கூலி தொழிலாளியான ஜகத் மகேந்திர லயனல் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நபர் நேற்று மதியம் கலேவல குடாவெவ பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள சுமார் 150 அடி உயரமான மின் கோபுரத்தில் ஏறிய போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற கல்கிரியாகம பொலிஸார், இன்றைய தினத்திற்குள் மகளை தேடி தருவதாக கூறிய போதிலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஜகத் மகேந்திர லயனல் கூறியுள்ளார்.
தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன- பொலிஸார்
எது எப்படி இருந்த போதிலும் முறைப்பாடு கிடைத்தில் இருந்து காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.