காசா யுத்தத்தில் காணாமல்போன குழந்தைகள் : வெளியான தகவல்
காசாவில் கிட்டத்தட்ட 21,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய உதவிக் குழுவான சேவ் தி சில்ரன் (save the children) தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், காணாமல் போன ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் அல்லது இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி அக்டோபர் 7 முதல் காசாவில் 14,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதுடன் ஏனைய பலர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அக்டோபரில் இருந்து, காசா பகுதி இடைவிடாத வன்முறையை எதிர்கொண்ட நிலையில் இதுவரை ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட 37,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |