ஜேர்மனின் இரண்டாவது மிகப்பெரிய ஆலயத்தில் இடம்பெறவுள்ள தேர்த்திருவிழா
ஜேர்மனின்(Germany) குமர்ஸ்பாக் நகரில் அமைந்துள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயத்தின் 31ஆவது வருட மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வுகள் இவ்வருடம் நடந்து முடிந்துள்ளதோடு அதன் வருடாந்த மஹோற்சவம் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.
இராஜகோபுர வடிவமைப்பு
ஜேர்மனியில் இரண்டாவது பெரிய ஆலயமான இந்த குறிஞ்சிக் குமரன் ஆலயத்தின் இராஜகோபுர வடிவமைப்பு வேலைகள் மிகவும் நேர்த்தியாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோபுரத்தை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தால் ஜேர்மனில் உள்ள மிகப்பெரிய ஆலயமாக இவ்வாலயம் மாறும் வாய்ப்பு உள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், குமர்ஸ்பார்க் நகர மக்கள் மற்றும் அதனை சூழு உள்ள மக்களின் முழுமையான அனுசரணையோடும் நிதி உதவியோடும் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆலயமாக இந்த ஆலயம் உள்ளமை குறிப்பிடத்கத்கது.
இந்த ஆலயத்தில் இளையோர்கள் முன்னின்று நடத்தும் திருப்பணிகளும், ஆலய நிர்வாகமும் சிறப்பாக இயங்கி வருகின்றது.
இந்தநிலையில், ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள தேர்த்திருவிழா நிகழ்வுகளில் நகர பிதாக்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதால், நடைபெறவுள்ள தேர்த்திருவிழாவில் அனைத்து பக்த அடியார்களும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |