காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்பு
பல நாட்களாக காணாமல் போயிருந்த 19 வயது பெண்ணின் உடல் இலுக்மண்டியவில் உள்ள களு கங்கை கரைக்கு அருகில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அறிக்கைகளின்படி, இங்கிரிய, ராய்கம்வத்தை சேர்ந்த குறித்த இளம் பெண் கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
இதனை தொடரந்து, அவரது சகோதரர் இங்கிரிய பொலிஸில் அவர் காணாமல் போனது குறித்து புகார் அளித்திருந்தார். குறித்த பெண் கடைசியாக மாலை 5:30 மணியளவில் இங்கிரியவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியே வந்துள்ளார்.
ஆசிரியர் மரணம்
பின்னர், அவர், காணாமல் போனதைத் தொடர்ந்து, ஹல்வதுராவைச் சேர்ந்த 30 வயது ஆசிரியர் ஒருவரை பொலிஸார் விசாரித்தனர், அவருடன் அவர் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மார்ச் 2 ஆம் திகதி பெண் தனக்கு இரண்டு முறை தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியதாகவும், ஆனால் பின்னர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆசிரியர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹல்வதுராவில் உள்ள ஒரு வீட்டில் குறித்த ஆசிரியரும் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து இங்கிரிய மற்றும் புலத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 46 நிமிடங்கள் முன்

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam

Optical illusion: பந்திற்குள் மறைந்திருக்கும் "5" களில் மறைந்துள்ள "3" ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
