உக்ரைனின் லிவிவ் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு
புடின் பொதுமக்களைக் குறிவைத்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் உக்ரைனின் மற்றொரு முக்கிய நகரமான Lviv-ல் விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிராகத் தனது தாக்குதலைத் தொடர்ந்துள்ளதாகவும், உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் விமான நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாகவும் லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி (Andriy Sadovy) கூறினார்.
இந்த தாக்குதலில், லிவிவ் நகரில் உள்ள ஒரு விமான பழுதுபார்க்கும் ஆலையை ரஷ்யப் படைகள் அழித்துவிட்டதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மேயர் கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,