சவுதி அரேபியாவின் மக்கா பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்
சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்த இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவுகள் மக்கா பிராந்தியத்தின் பல இடங்களில் வீழ்ந்துள்ளதாக அந்த நாட்டு சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் இந்த ஏவுகணைகளை ஏவியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. சபூஹா கிராமம் உட்பட பல பகுதிகளில் ஏவுகணைச் சிதைவுகள் வீழ்ந்துள்ளன.
சட்டத்தை மீறும் செயல்
பொதுமக்கள் இலக்குகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறும் செயல் என சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

எனினும், மக்கா மற்றும் மதீனா நகரங்களை இலக்காகக் கொள்வதில்லை என்றும், தமது இராணுவ நடவடிக்கைகள் வேறு இடங்களிலுள்ள இராணுவ மற்றும் மூலோபாய இலக்குகளை நோக்கியவை என்றும் ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் தீவிரமடைந்து வருவதால், செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் அல்-மண்டெப் நீரிணையின் பாதுகாப்பு குறித்தும் கவலை அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam