மாரடைப்பினால் துடித்த நண்பரை நடுவீதியில் விட்டுச்சென்ற அவலம்
போதைப்பொருள் அருந்திய நண்பருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து நடுவீதியில் விட்டுச்சென்ற நபரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிம்ரோஸ் பூங்காவின் கீழ் பகுதியில் வீதியோரத்தில் இருந்த நிலையில் (22) திகதி சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வீதியோரமாக வந்தமை குறித்து விசாரணை நடத்தியதில், நண்பர் ஒருவர் அவரை அழைத்துச்சென்று அந்த இடத்தில் விட்டுச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவரும் அவரது நண்பரும் கண்டி பிரிம்ரோஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri