மினுவாங்கொடையில் இடம்பெற்ற கொடூர கொலை - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
மினுவாங்கொடை பிரதேசத்தில் தந்தை மற்றும் இரு மகன்களை சுட்டுக் கொலை செய்யப்பட்ட தொடர்பில் கணவன், மனைவி தம்பதிகள் மற்றும் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்த கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் மறைந்திருந்த பாதாள உலக தலைவரால் பெறப்பட்ட பண ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த முக்கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மினுவாங்கொட ஹீனட்டியான பிரதேசத்தில் செயற்படும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களே இந்தக் கொலைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முத்தரப்பு கொலையை செய்த வாடகை கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹன புஸ்பகுமார, மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மினுவாங்கொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் காத்தாடி தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பிலும் 7 பேர் பலியாகியுள்ளனர்.



