வடக்கு இளைஞர், யுவதிகளிடம் அமைச்சர் ரொசான் ரணசிங்க விடுத்துள்ள கோரிக்கை (Photos)
வடக்கு ஆளுநர் வடக்கு மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் நன்கு அறிந்து செயற்படுவதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
யாழில் அமைந்துள்ள இலங்கை தொழில் பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகளை நேற்று (12.01.2023) மீள ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கு ஆளுநர் வடக்கு மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் நன்கு அறிந்து செயற்படுகிறார். வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளின் எதிர்கால வழிகாட்டலுக்காக பல்வேறு துறை சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
பல்வேறு திட்டங்கள்
எமது அமைச்சின் கீழுள்ள தொழில் பயிற்சி நிலையங்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வட மாகாணத்தில் இருக்கும் இளைஞர் யுவதிகளிடம் பல்வேறு திறமைகள் காணப்படுகின்ற நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகளை பயன்படுத்தி தமது திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
யாழ். மாவட்டத்திலிருந்து தர்ஷினி தென்னிலங்கையில் சுசந்திக்கா இருவரும் பல்வேறு தடைகள் வந்த போதும் தமது அயராத முயற்சியினால் சாதனை படைத்தவர்கள்.
அவர்களைப் போன்று வடக்கு இளைஞர் யுவதிகளும் தமக்கு கிடைக்கின்ற சார்ப்பங்களை சரிவர பயன்படுத்தி தேசிய ரீதியிலும், சர்வதேச நீதியிலும் உயர்வு பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.





புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
