சுகாதார அமைச்சருக்கு எதிராக கொழும்பில் களமிறங்கிய சிவில் செயற்பாட்டாளர்கள் (Video)
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் சத்தியாகிரக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றையதினம் (18.07.2023) சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டிலுள்ள அரச மருத்துவமனைகளில் தரமற்ற மருந்து பொருட்களின் பாவனையால் மர்மமான முறையில் பல மரணங்கள் சம்பவித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அசமந்த போக்கினாலேயே இவ்வாறான உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறி சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
