சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு
அரச வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கறுப்புக்கொடியினை பறக்கவிட வேண்டாமென சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் கறுப்புக்கொடிகளை கட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதனால் இவ்வாறு தடை விதித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
தற்போதைய சமூக,பொருளாதார சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்முறை நடவடிக்கைகள் தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
