அனோஜனின் விடுதலை விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு கையாளுமாறு வலியுறுத்து
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிவராசா அனோஜனை விடுவித்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வெளிவிவகார அமைச்சினூடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.
இன்று(06.10.2026) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மரண தண்டனை விதிக்கப்பட்டு சவூதி அரேபியாவில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இது மிகவும் சோகமான ஒரு சம்பவமாகும்.
சரியான நடைமுறை
அவரைக் காப்பாற்றுவதில் நம் அனைவருக்கும் பெரும் ஆர்வம் இருக்கிறது.எனினும் அது சரியான நடைமுறைக்கு இணங்கவே இடம் பெற வேண்டும்.

இது தொடர்பில் முமுமையான பொறுப்பையும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வழங்க வேண்டும் செய்யப்பட வேண்டிய அனைத்து விடயங்களும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பன நேரடியாகத் தலையிட்டால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
கோரிக்கை
எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய மன்னருக்கும் அரசாங்கத்திற்கும் இந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி காரணங்களை முன்வைப்பதற்காக பிரதி நிதிகள் குமு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விடயத்தில் அரசாங்கம் பெறுப்புடன் செயற்படுகின்றது.எனவே நாம் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.