சில மாவட்டங்களில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சமய வழிபாட்டுத் தளங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் பொலிஸார் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் ஒலிபெருக்கிகள் பாவனை கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார பிரிவினர், நகரசபை, பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகம் ஆகியவற்றிக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை 06 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
