யாழில் இடம்பெறும் சர்வதேச சிலம்பம் போட்டி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐந்து நாடுகள் பங்குபற்றும் சர்வதேச சிலம்பம் போட்டியானது யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது.
குறித்த போட்டியானது சிவலீமன் சிலம்ப சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (04.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது இலங்கை சிவலீமன் சங்கத்தின் தலைவரும் உலக சிவலீமன் சங்கத்தின் இலங்கைத் தலைவருமான யசோதரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
போட்டியாளர்கள்
இலங்கை, இந்தியா, லண்டன், மலேஷியா, துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டியில் விளையாடி வருகின்றனர்.
இந்த விழாவின் பரிசளிப்பு நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க (Rohana Dissanayake) கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் : ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
