வீசா வழங்கலில் கேள்விப்பத்திர முறை அவசியமில்லை: அரசாங்கம் அறிவிப்பு
பல்வேறு நாடுகளில் வி.எப்.எஸ் குளோபல் (VFS Global) நிறுவனம் இ-வீசா செயலாக்கத்தில் ஈடுபட்டுள்ளதால், இலங்கையின் (Sri Lanka) இணைய வீசா விடயத்தில் கேள்விப்பத்திர செயன்முறைக்கு அவசியம் இருக்கவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது தொடர்பான முன்மொழிவு வந்தவுடன் அதனை ஆய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டு அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக கட்டணங்கள்
வீசா கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்பட்டாலும், அது அரசாங்கத்திடம் திருப்பித் தரப்படும் விதிமுறைகளின்படி வீசா விகிதங்கள் நாடாளுமன்றத்தால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளும் கூட இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் ஆமோதித்துள்ளன.
மேலும், மூன்றாம் தரப்பு அவுட்சோர்சிங் நிறுவனம், தாம் வழங்கும் சேவைகளுக்கு மாத்திரமே மேலதிக கட்டணங்களை அறவிட்டுள்ளனர் என்றும் அமைச்சர் டிரன் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
