ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வழக்கில் கனடாவின் புதிய அறிவிப்பு: இலக்கு வைக்கப்படும் இந்திய அரசு
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(Hardeep Singh Nijjar) வழக்கில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய(Canada) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிட் ஸ்குவாட் (தாக்குதல் குழு) உறுப்பினர்கள் 3 பேர் கைது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
நிஜ்ஜார் படுகொலை
''நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது.
கொலை வழக்கு மிகவும் தீவிர விசாரணையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தனித்தனியான விசாரணைகள் நடந்து வருகின்றன.
கைது செய்யப்பட்ட நபர்களின் ஈடுபாடு மட்டுமல்ல. இந்த முயற்சிகளில் இந்திய அரசாங்கத்துடனான தொடர்புகளை விசாரிப்பதும் அடங்கும்.
கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது தலா ஒரு முதல் நிலை கொலை மற்றும் நிஜ்ஜாரின் கொலைக்கு சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது." என்றார்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |