விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி
நாட்டின் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் (16.07.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உரங்கள் கொள்வனவு
இதேவேளை, அடுத்த பருவத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வதற்கு வவுச்சர்ளுக்கு பதிலாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மகிந்த அமரவீரவின் கருத்துப்படி, விவசாயிகள் விரும்பினால் இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை தனியார் அல்லது அரச உரக் கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்யலாம் என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
