வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஹியங்கனை ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அடிப்படை சிகிச்சை சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் உதவியுடன் இரண்டு வைத்தியசாலைகளும் சுத்தம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர், அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வெள்ளம் காரணமாக மூடப்பட்ட தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீண்டும் திறக்கப்பட்டுள்ள தேசிய பூங்கா
சுற்றுச்சூழல் அமைச்சின் கூற்றுப்படி, வில்பத்து தேசிய பூங்காவின் ஹ_னுவிலகம நுழைவாயில், யால தேசிய பூங்காவின் பலடுபன நுழைவாயில், மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கௌடுல்ல தேசிய பூங்கா ஆகியவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சேதமடைந்த வீதிகளின் சில பகுதிகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடியதாக இருக்கும்.
அத்துடன், குமன, ஹோர்டன் சமவெளி, வில்பத்து, மின்னேரியா மற்றும் யால தேசிய பூங்காக்களில் வெள்ளம் காரணமாக மூடப்பட்ட ஐந்து சுற்றுலா பங்களாக்கள் இந்த மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.