துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்
துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்காக துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
துப்பாக்கிகளை வைத்திருக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குள் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குப் பின்னர் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகள் வைத்திருப்பது 22ஆம் இலக்க ஆயுத சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
