தலா இரு உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொண்டுள்ள அமைச்சர்கள்!
10 அமைச்சர்கள் தலா இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இந்த அமைச்சர்கள் அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு மேலதிகமாக மாதிவெலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் இருக்கும் இல்லங்களையும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையின் அடிப்படையில், அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தும் அமைச்சர்களின் பட்டியலை வழங்குமாறு நாடாளுமன்ற பிரதானிகள், அரச நிர்வாக அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த பட்டியல் கிடைத்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் இல்லங்களை பெற்றுக்கொண்டு, அமைச்சர்களின் இல்லங்களில் குடியிருப்போர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri