ஜப்பான் செல்ல அமைச்சர்கள் சொந்த செலவில் டிக்கெட் வாங்கினர்! - அமைச்சர் நாமல்
ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக, ஜப்பான் செல்ல தனது விமான டிக்கெட்டை இராஜாங்க அமைச்சர் ரோஷான் ரணசிங்கவே கொள்வனவு செய்தார் என்று விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளைக் காண அவரும் தாமும் மட்டுமே ஜப்பானுக்குச் சென்றதாகவும், மற்ற இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சகங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபடுவதற்காக ஜப்பான் சென்றதாகவும் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்- ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் ரோஷான் ரணசிங்க ஜப்பானில் 25 ஆண்டுகளாக சொந்தமாக வர்த்தகம் செய்து வருவதாகக் கூறினார்.
ஜப்பானில் தங்கியிருந்த போது தான் ஒலிம்பிக் குமிழியின் கீழ் இருந்ததாகவும், பிரதமர் அலுவலகம், ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜப்பானில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் அலுவலகம் ஆகியவற்றை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகளைக் காண இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே, டி.வி.சானக மற்றும் ரோஷான் ரணசிங்க ஆகியோர், ஜப்பானுக்கு விஜயம் செய்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று முன்னதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
