மாதம் ஒருமுறை அமைச்சர்கள் சைக்கிள்களில் பயணிப்பார்கள்: அற்புத அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பினால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் மாதத்தில் ஒரு முறை சைக்கிளில் பயணம் செய்வார்கள் என அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சைக்கிளில் பயணிப்பதில் இருக்கும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர முடியாவிட்டாலும் மாதத்தில் ஒரு முறையாவது அவர்கள் அதில் பயணிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது சில அரச அதிகாரிகள் சைக்கிள்களில் கடமைக்கு வருகின்றனர். அவர்களை பாராட்ட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தயாராக இருக்கின்றேன் எனவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
சைக்கிள்களில் வேலைகளுக்கு செல்லுமாறு அமைச்சர் அமரவீர கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியிருந்தார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam