கோட்டா அரசில் உள்ள அமைச்சர்கள் நரிகள்: மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு
கோட்டா அரசில் உள்ள அமைச்சர்கள் நரிகள் என மக்கள் விடுதலை முன்னணி யாழ் மாவட்ட பொறுப்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாம் நாட்டை நேசிக்கின்றோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டு வளங்களை இரகசியமாக விற்க ஆரம்பித்துள்ளனர். எரிசக்தி அமைச்சர் உதயன் கம்பன்பில அமைச்சரவைக்குப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
அதிலே திருகோணமலை எண்ணெய் குதங்களை 50 ஆண்டுகளுக்கு இந்திய ஐ.ஒ.சி நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்குவதற்கு ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படவுள்ளது . அதற்கான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது .
ஆகவே இவர்கள் அனைவரும் நரிகள் என்பதை நிரூபித்துள்ளனர். குறிப்பாக இலங்கை இந்திய ஒயில் கூட்டுத்தாபனம் என்ற பெயர் அமையும் வகையில் இந்த குத்தகை விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
5 வருடத்துக்கு ஆட்சியில் உள்ள பாவிகள் 50 வருடத்துக்கு நாட்டை விற்று எங்கள் பிள்ளைகளுக்கும் எதுவுமே இல்லாமல் செய்து விடுகின்றனர் . கடந்த 23 வருடங்களாக எமது நாடு இவ்வாறு தான் விற்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் சரியாகும் என்றால் 49 வீத எண்ணெய் வளங்கள் அவர்களுக்குச் சென்றுவிடும்.
அதன்
பின்னர் எரிபொருள் இறக்குமதி, விற்பனை, களஞ்சியபடுத்தல் ஆகிய செயற்பாடுகள்
இந்தியாவிடம் முழுமையாகச் சென்றுவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam