சஜித் அணியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகள்
பிரதான எதிர் கட்சியான [சஜித் அணி] ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்துடன் இணையவிருக்கும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ள அமைச்சுக்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகள்

இதனடிப்படையில், சுகாதாரம், முதலீட்டு ஊக்குவிப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரம்,நகர அபிவிருத்தி அமைச்சுக்களை இவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் இறுதி முடிவு

எவ்வாறாயினும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இறுதி முடிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எகிப்து பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் எடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் சுகாதார அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு பதவிகளை தற்போது கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 12 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan