வழக்கு விசாரணையில் முன்னிலையாகாத அமைச்சர்
வழக்கு ஓன்றின் விசாரணையின் போது, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, மன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) இந்த வழக்கு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு்ள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையாக
2022, ஜூலை 09 அன்று கொள்ளுப்பிட்டி, ஐந்தாவது பாதையில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை அழித்த தாக்குதல் மற்றும் தீயணைப்பு படையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக விசாரணையில் சந்தேக நபராக, அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குணசேகரவின் சட்டத்தரணி, உடல்நலக் குறைபாடுகள் காரணமாக, பிரதி அமைச்சர் மற்றும் 3 சந்தேக நபர்கள் மன்றில் முன்னிலையாக முடியவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நான்கு சந்தேக நபர்களுக்கும் கைது உத்தரவை பிறப்பித்த நீதவான், அடுத்த விசாரணையில் குணசேகரவை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
