வேலைநிறுத்தம் செய்தால் வழக்குப்பாயும்! தபால் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அவர்களுக்கு எதிராக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
வேலைநிறுத்தமொன்றுக்கு அழைப்பு
கடமைக்கு சமூகமளிக்கும் போது கைவிரல் அடையாளம் மூலம் வருகையை உறுதிப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிராக தபால் திணைக்கள ஊழியர்கள் இன்றையதினம் வேலைநிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வேலைநிறுத்தம் அநீதியானது என்று வெகுசனத்தொடர்பு மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு
தபால் திணைக்களம் நஷ்டத்தில் இயங்குவதைப் பொருட்படுத்தாமல் கடந்த முறை சம்பள அதிகரிப்பின் போது தபால் திணைக்கள ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் நளிந்த, அவ்வாறான பின்புலத்தில் மேற்கொள்வதன் மூலம் தபால் திணைக்களம் இன்னுமின்னும் நஷ்டத்தையே எதிர்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான நிலையில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் தபால் திணைக்கள ஊழியர்களுக்கு எதிராக பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்ற்சசாட்டில் வழக்குப் பதியப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



