கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை
பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோலிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
எந்தவொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கம் அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறுவது மற்றும் சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உடனடியாக சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தல்
பெட்ரோலிய சிறப்பு ஏற்பாடுகள் சட்ட திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாளை (செவ்வாய்க்கிழமை) சுகயீன விடுமுறையில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தியுள்ளன.
Petrolieum services has been declared as an essential services for the last 6 months. If any employee or trade union is found breaching the essential services regulations & disrupting services, immediate legal & disciplinary action will be taken against them. pic.twitter.com/Rkhg0eznHA
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 17, 2022
பெட்ரோலிய தொழிற்துறையை தாராளமயமாக்குவதற்கு வழி வகுக்கும் சட்டமூலம் நாளை நாளைளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் இலங்கைக்கான புதிய உலகளாவிய சில்லறை விற்பனையாளர்களை எளிதாக்கும், முதலீடுகளை ஊக்குவிக்கும் மற்றும் சேவையை ஒழுங்குபடுத்துவதற்கு ஆற்றல் வழங்கல் குழுவை அமைக்கும் என்றார்.
