தனிக் குழுவை உருவாக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்! - கடும் நடவடிக்கைக்கு தயாராகும் பசில்?
அமைச்சர் விமல் வீரவன்ச சரியான பாதையில் செல்லாவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பசில் ராஜபக்ச ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வௌியிட்டுள்ளது. பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் விமல் வீரவன்சவின் பெயரைக் குறிப்பிடாமல் அரசாங்கத்திற்குள் தனித்தனி கும்பல்களை உருவாக்கி அரசாங்கத்தை சங்கடப்படுத்த முயன்றதைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு பசில் ராஜபக்ச வெளிப்படையாக பதிலளித்திருந்தாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010 இல் உருவான மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க அரசாங்கத்திற்குள் இருந்த சிலரின் துரோக நடவடிக்கைகளை பசில் ராஜபக்ச இந்த சந்திப்பின் போது விளக்கியிருந்தார்.
எனினும், இம்முறை அத்தகைய விடயம் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை, யாராவது அத்தகைய நடவடிக்கைக்குத் தயாரானால், அவரது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்படுவார் என பசில் ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam