துமிந்த நாகமுவவிற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் சென்ற டிரன் அலஸ்
ஜே.வி.பி மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்டோரை இணைத்து கருத்து வெளியிட்ட முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவவிற்கு எதிராக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
டிரான் அலஸ் மற்றும் ஜே.வி.பினர் ஐரோப்பிய தீவு ஒன்றில் வெளிநாட்டுக் கணக்கைப் பேணுவதாக ஆகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நாகமுவ தெரிவித்ததாக அமைச்சர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த கூற்று குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மை
அந்தஸ்து பாராமல் எவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தாம் எப்போதும் உத்தரவிடுவதாகவும், இந்த முறைப்பாட்டிற்கும் அது பொருந்தும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 17 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
