ரஞ்சன் ராமநாயக்கவிற்காக குரல் கொடுக்கும் அமைச்சர்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஓர் நல்ல மனிதர் என அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை பதியதலாவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
சிலர் கூறுகின்றார்கள் ரஞ்சன் ஓர் கெட்ட மனிதர் என்று ஆனால் எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அவர் மிகவும் நல்ல மனிதர், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவர் யாருக்கும் எவ்வித தீங்கும் செய்தவர் கிடையாது.
துரதிஸ்டவசமாக அவர் வெளியிட்ட கருத்துக்களை நாடாளுமன்றிற்கு வெளியே குறிப்பிட்டிருந்தார், அதே விடயங்களை அவர் நாடாளுமன்றில் கூறியிருந்தால் அவரை யாராலும் எதனையும் செய்ய முடியாது.
ரஞ்சன் ராமநாயக்க கூறிய விடயங்களில் சில அரைவாசி உண்மை, சிலவை முழு உண்மை.
உண்மைகளை உரைப்பவர்கள் மீது கோபம் கொள்வதும், பொய்யுரைப்பவர்களை கொண்டாவடுவதுமே இந்த மக்கள் சமூகத்தின் மரபாக மாறியுள்ளது என அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
