இராணுவத்தினரை பாராட்டிய சுனில் ஹந்துன்னெத்தி
முறக்கட்டான்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கட்டான்சேனை இராமகிருஸ்னமிஸன் பாடசாலைக்கு முழுமையாக உரியமுறையில் கைளிக்கப்பட்டுள்ளது.
முறக்கொட்டான்சேனை படைமுகாம் அகற்றப்பட்டு 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பகுதியை மீளளிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(30) இராணுவ முகாம் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.
இராணுவத்தினர்
1989 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினர் முகாமிட்டதன் பின்னர் அவர்களால் இலங்கை இராணுவத்தினருக்கு இந்த பிரதேசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கு இராணுவத்தினர் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இந்த பாடசாலையை உடனடியாக ஆரம்பிக்ககூடிய நிலையில் இராணுவத்தினர் கையளித்தமைக்கு நன்றிகள்.
மற்றும் பொதுமக்களின் தேவைக்காக காணப்படும் காணிகளை நீதி துறையின் அணுகலின் அடிப்படையில் அவற்றையும் விடுவித்து வரப்படுகின்றன.
35 ஆண்டுகள்
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்த வந்த முறக்கொட்டான் சேனை இராமகிருஷ்னா பாடசாலை வளாகத்தில் இயங்கிய குறித்த இராணுவ முகாமானது தற்போது முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதி பாடசாலை நிருவாகத்திடமும் மக்களிடமும் மீள ஒப்படைக்கப்படும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கைத்தொழில்துறை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி பிரதம அதீதியாக கலந்து முகாம் இருந்த நிலத்தினை உரியவர்களிடம் கையளித்துள்ளார்.
சுமார் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த நிலப் பிரச்சினைக்கு, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளது.










