பிரதமரின் அலுவலகம் திறக்கப்படுவதை நிறுத்திய அமைச்சர்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருணாகல் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முற்பகல் திறக்கப்படவிருந்த நிலையில், அலுவலகத்தின் திறப்பு விழாவை திடீரென மார்ச் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது.
குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், அலுவலகம் திறக்கப்படுவதை தாமதிக்குமாறு விடுத்த கோரிக்கையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
குருணாகல் - புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பகுதியில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதுடன் பிரதமரின் சகல ஒருங்கிணைப்பு பணிகளும் அவரது தனிப்பட்ட செயலாளரான இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் தனிப்பட்ட செயலாளரான ரோஹித்த ராஜபக்ச தலைமையில் நேற்றைய தினம் அலுவலகம் திறக்கப்படவிருந்தது.
அலுவலகம் அமைந்துள்ள கட்டடம் கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam