சிரேஸ்ட அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ள கஞ்சன
நிறுவன சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மின்துறை சீர்திருத்த செயலகத்திற்கு சிரேஸ்ட அதிகாரிகளை நியமிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளார்.
ஒரு அமைச்சரவை பத்திரத்தின்படி, சீர்திருத்த செயல்முறையை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் மற்றும் தொழில்முறை பணிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கான பொறுப்புகள் இந்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும்.
அதிகாரிகளுக்கான ஊதியம்
அரசாங்கத்திற்கு எந்தவிதமான நிதிச்சுமையும் இன்றி சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்களினால் இந்த அதிகாரிகளுக்கான ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவகம் ஆகியவை இந்த திட்டத்துக்கு உதவுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
