எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருந்த போது, ஒதுக்கப்பட்ட எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதி, உண்மையில் எரிபொருள் விலையை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படவில்லை.
மாறாக இலங்கை மின்சார சபைக்கான கடன்களை செலுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டது என்று எரிபொருள் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதி, உலக சந்தையில் எரிபொருள் விலை குறைப்பின் பயனைப் பயன்படுத்தி 48 பில்லியன் டொலர்களாக ஒதுக்கப்பட்டது.
எனினும் அது பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபைக்கு செலுத்தவேண்டிய கடனுக்காக செலுத்தப்பட்டதாக கம்மன்பில இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2020 மார்ச் 30 அன்று நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை அறிக்கை மற்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய வங்கி அறிக்கை ஆகியவை நிதியின் நோக்கத்தை தெளிவாக விளக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை சூத்திரம் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த
அமைச்சர், சூத்திரம் பயன்பாட்டில் இருந்திருந்தால், எரிபொருள் விலை இதை விட
அதிக விகிதத்தில் அதிகரித்திருக்கும் என்று கூறினார்.