உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டல்களை பின்பற்றாது, உதயங்க வீரதுங்க அதற்கு முரணாக செயற்பட்டு வருவதாக பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
உதயங்க வீரதுங்கவின் சில செயற்பாடுகள் காரணமாக சுற்றுலாத்துறை அமைச்சு பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அமைச்சின் விவகாரங்களில் அவர் தலையிடுவதாகவும் அமைச்சர் முறையிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரின் இந்த முறைப்பாட்டுக்கு அமைய உதயங்க வீரதுங்கவை அரசாங்கம் எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது.