ரணிலை புகழும் அநுர அரசின் பிரதான அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்த போதும், அது மகிந்த ராஜபக்ஷவுக்கு இல்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ரணிலின் புதிய தாராளமயம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இலங்கை சமூகத்தில் அதை ஆதரிக்கத் தயாராகவும் விருப்பமாகவும் இருக்கும் அரசியல்வாதி ரணில் மட்டுமே.
அதனை ரணில் நன்கு அறிந்துள்ளார். மகிந்தவுக்கு அப்படி ஒன்றும் இல்லை. அவர் காலையில் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பார்.
உலக கண்ணோட்டம்
மகிந்த சமூகத்தை வித்தியாசமான முறையில் பராமரித்தார். அவர் உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டவர் அல்ல. ஆனால் ரணிலுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை உள்ளது.
வேலையில்லாதவர்களுக்கு அரசு வேலை வழங்குவதே நமது நாட்டின் கொள்கையாகும். அது தவறல்ல. எனினும் நான் அதை ஏற்கவில்லை. அரசாங்கம் தலையிட்டு நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
நாட்டில் வேலைகள் இல்லாததால் அனைவரும் அரச வேலைகளை கேட்கிறார்கள். எனினும் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அரச சேவையில் யாரும் மொத்தமாக சேர்க்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
