ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாத அமைச்சர்! தொடர்ந்தும் அச்சுறுத்துவதால் சர்ச்சை
சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக செயற்படுபவரின் வீட்டின் மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கிருலப்பனை சரணங்கர வீதியில் உள்ள வீட்டிற்கான ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மின் கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லமாகும். தற்போது அதன் உரிமம் உயர் இராணுவ அதிகாரியின் பெயரில் உள்ளது. எனினும் இன்று வரையில் அங்கு பிரபல அமைச்சர் ஒருவரே தங்கியுள்ளார்.
மின் கட்டணம் செலுத்தாமையினால் வீட்டில் மின்சாரத்தை தடை செய்வதற்கு கிருலப்பனை மின் பொறியியலாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் பல முறை அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இருந்த போதிலும் அதன் பாதகாப்பு அதிகாரிகள் கதவினை திறக்காமையினால் மீளவும் செல்ல நேரிட்டுள்ளதாக ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் மின்சார கட்டணத்தை செலுத்த தவறினால் மின் தடை செய்வதற்கு வரும் போது கதவு திறக்கப்படவில்லை என்றால் வீட்டிற்கு மின்சாரம் வழங்கும் தூணில் மின்சாரம் தடை செய்யப்படும்.
எனினும் இங்கு பிரபல அமைச்சர் உள்ளமையினால் அந்த நடைமுறையை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி
வெள்ளவத்தையில் சண்டித்தனம் காட்டிய முக்கிய அமைச்சர்