மன்னாரிற்கு இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் விஜயம்
இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளை சந்திக்கும் வகையிலும், மன்னார் மாவட்ட இளைஞர்கள், விளையாட்டு துறை சார்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் இன்று(29.03.2025) அவர் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கில் இடம்பெற்ற சந்திப்பில் மன்னார் மாவட்ட விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மைதான பணிகள்
குறித்த சந்திப்பின் போது, நீண்ட காலமாக கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யப்படாது காணப்படுக்கின்ற நறுவிலிக்குளம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகளை விரைவில் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், குறித்த மைதானத்தின் தற்போதைய நிலை தொடர்பில் பார்வையிடுவதற்காக அமைச்சர் தலைமையிலான குழுவினர் நறுவலிக்குளம் சர்வதேச மைதான பணிகள் இடம்பெற்று வரும் பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
