நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை சுகாதார அமைச்சராக நியமித்திருக்க வேண்டும்! - சம்பிக்க
நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நபர் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மருத்துவ நிபுணர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இலவச கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டு முக்கியமான துறைகளில் இலங்கை முன்னணியில் உள்ளது. இந்தத் துறையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் சக தொழில் வல்லுநர்களின் மரியாதையைப் பெற வேண்டும்.
இருப்பினும் புதிய நியமனங்கள் ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளன. ஒரு தகுதி வாய்ந்த நிபுணரை சுகாதார அமைச்சராக நியமிக்க அரசாங்கம் தவறிவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோர் அmந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்திருப்பார்கள்.
எவ்வாறாயினும், புதிய அமைச்சரின் நியமனம் மருத்துவ ஊழியர்களிடையே மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும், அமைச்சரவை மாற்றத்தின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan