தென்கொரிய பிரதி சுற்றாடல் அமைச்சரை சந்தித்த இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்
தென்கொரியாவில் நடைபெற்ற பசுமைக் காலநிலை மாநாட்டில் பங்கேற்ற சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட், தென்கொரிய பிரதி சுற்றாடல் அமைச்சர் யோ ஜேசுலை சந்தித்துள்ளார்.
தென்கொரியாவின் பரடைஸ் ஹோட்டலில் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்ற இம்மாநாட்டில் ஆசிய, பசுபிக் சமுத்திர நாடுகளின் அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் பற்றி அமைச்சர் நஸீர் அஹமட், பசுமைக் காலநிலை மாநாட்டில் கலந்துரையாடியுள்ளார்.
நிதியுதவி வழங்க இணக்கம்
இலங்கையில் சுற்றாடல் துறையுடன் சம்பந்தப்பட்ட சுற்றாடல் கனிய மணல் அகழ்வு தொடர்பிலும் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கள்
இலங்கை, தென்கொரியா விவசாயிகளின் பரஸ்பர தொழிநுட்ப மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதோடு சுற்றாடல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பிலும் ஆர்வம் காட்டப்பட்டடுள்ளது.
மேலும் நிதியுதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், முகவர் நிறுவனங்களுடன் அமைச்சர் ஹாபிஸ் நசீர், அங்கு நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக சுற்றாடலுடன் தொடர்புடைய திட்டங்களை நிறைவேற்ற பெருமளவான நிதியுதவிகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
